Total Pageviews

Saturday, July 19, 2014

கொங்கு வேளாளர்களே சேரமரபினர்



சங்ககால கொங்கு நாடு தான் சேர நாடு,கொங்கு வேளாளர்களே சேரமரபினர்.
"கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்
வஞ்சிநகர் நகர் நாலும் வளமையால் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்."
-சேரர் மீது வெண்பா
வஞ்சிநகர் நாலு: 'கருவூர்,' 'தாராபுரம், 'மூலனூர், 'விளங்கில்

கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர்.

                                             சேர கொங்க தேசத்தின் பாரம்பரிய விற்கொடி
சேரர் செப்புக்காசுகள் (மங்கல வாழ்த்தில் வரும் கருவூர் பணம்)
  தாராபுரம் தில்லாபுரியம்மன் கோயிலின் முன்புள்ள பலகைக்
கற்சாசனம் வருமாறு:
     "சாலி (1125) க்குமேல் செல்லா நின்ற காளயுத்தி வருஷம் புதவாரம்
தசமி உத்தரம் மீனலக்கினம் இப்படிப்பட்ட சயதினத்தில் கொங்குவஞ்சி
லாடபுரம், ராஜராஜபுரம், விதாபுரம் நறையநாடு காணி கொண்டது.
பிரமணகவுண்டன்..... நல்லா.... ட்டிகவுண்டன் நல்லமுத்துக் கவுண்டன்,
சின்னண கவுண்டன் தெய்வம் வஞ்சியம்மன் தில்லாபுரி பிரமராயன் ....."
என்பது.

 நீலம்பேரூர் (நீலம்பூர், தாராபுரம்-மூலனூர்) காணிச் செப்பேடு





சங்ககால சேர மரபினர்

சங்ககால கொங்கு நாடு தான் சேர நாடு , கருநாடகம் ,கேரளா ,துளு .. உபநாடுகள்..சங்க இலக்கியங்களில் கூறிக்கபெரும் சேர மன்னர்களில் .. இரும்பொறை மட்டும் தான் கொங்கு நாட்டு கரூரில் அருகில் கிடைத்த 2 கி.பி கல்வெட்டில் கூரிகப்பெருகிறார் ..




கொற்றந்தை இளவன்(கொற்றந்தை கூட்டம்) இவற்றில் கொற்றந்தை என்ற குடி இரண்டாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது என அறிகிறோம். புகளூர் சேரமன்னன் கல்வெட்டின் அருகில் அதே கல்வெட்டில் கொற்றந்தை இளவன் என்பவன் குறிக்கப்படுகிறான்.
                                                 
அந்துவன் சேரர் வழிமுறையில் கலந்தவர்கள் அந்துவன் குலத்தினர். கரிகாலன் தாய் கொங்கு வேளாளப் பெண். அவன் மாமன் இரும்பிடர்த்தலையர். இவர் கொங்கு வேளாளக் கவுண்டர். சேர, சோழ பாண்டியர் மூவருக்கும் பெண் கொடுக்க முடிசூட, வாள்கொடுக்க, உரிமை பெற்றவர்கள் கொங்கு வேளாளர்கள். வெள்ளாளப் பெண்ணுக்குப் பிறந்தவர்களையே கொங்கு நாட்டு ஆட்சி நடத்த விட்டனர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றது புறம். தென்னாட்டுத் தமிழர் தாம். சேர, சோழ பாண்டியர்கள் சேர மரபினர் கொங்கு நாட்டு வேளாளர்களுடன் நெருங்கிய தொடர்பினர். பண்டைய நாளில் ஓரினமாக இருந்தவர்கள். "கன்னடமும், தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்துக்கும் எழுந்து ஒன்றுபல ஆயிடினும்" என்றார் மனோன் மணியம் சுந்தரம்பிள்ளை. கொங்கு வேளாளர்களே சேரமரபினர் .
1 . உரின யசேரனுக்கும் , கொங்கு வேளாளர் வெளியன் வேண்மான் மகள் நல்லினிக்குப் பிறந்தவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ( பதிற் I )(chera kootam x veliyan kootam)
2 . பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் நார் முடிச்சேரல் ( பதிற் II )(chera kootam x pathumam kootam)
3 . வேளாவிக் கோமான் தேவிக்கும் , நார் முடிச்சேரனுக்கும் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுக்கும் சேரலாதன் ( பதிற் III )(chera kootam x pathumam kootam)
4 . அந்துவன் குலத்துப் பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் ( பதிற் IV )(chera kootam x anthuvan kootam)
5 . செல்வக்கடுங்கோவிற்கும், வேளாவிக் கோமான் பதுமன் தேவிக்கும் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை ( பதிற் V )(chera kootam x pathumam kootam)
6 . குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செல்லைக்கும் பிறந்தவன் இளஞ்சேரலிரும் பொறை ( பதிற் VI ).(chera kootam x anthuvan kootam)
கடைச்சங்க கால எட்டுச்சேர அரசர்களில் ஆறுபேர் கொங்கு வேளாளப் பெண்களின் மக்கள் ஆவர் என்பதை பதிற்றுப் பத்து கூறுகிறது. இவர்களைப் பாடியவர்கள் பலரும் கொங்கு வேளாளர்களே.




சேரன் குலத்தினர் சேர மரபினர்

அதனால் சேரன் குலத்தினர் சேர மரபினர் . குளித்தலை வட்டம் மதில்கரைச் செல்லாண்டியம்மன் சேரர் குலத்தில் செல்லாண்டி அம்மன் கோவிலை, கொற்றனூரிலும் கட்டினர். இந்தச் சேரன் குலப்பெண் கணவன் இறந்ததும் தீப்பாய்ந்து உடன் கட்டை ஏறினாள். வீர மாத்தியம்மன் தீப்பாய்ந்தம்மன் நாமக்கல் நகரிலும் உள்ளது. சேரன் குலத்தினர் குலதெய்வமாக வணங்குகின்றனர். காங்கேய வட்டத்தில் காணி கொண்டது சேரன் குலத்தினர். நீலாம்பூர் தெய்வமாகக் கொண்டனர். கரூர் வட்டத்துச் சேரன் குலத்தினர் கோனூர் கந்தம் பாளையத்துக் காணியம்மனைக் குலதெய்வமாக கொண்டனர். சேரன் செல்வக் கடுங்கோவை கபிலர் சந்தித்த இடம். நாமக்கல் கோனூர்தான். தாராபுரத்தின் சேரகுலத்தினர். மூலனூர் வஞ்சியம்மனை வழிபடுவர். கொற்றனூர் முத்தூர், நீலாம்பூர்,கோனூர், சிற்றாளத்தூர்,நாமக்கல், சேரன் குலத்தினரின் காணி ஊர்களாம்.
சேரன், வில்லி, வில்லம்பர், அந்துவன், பனையன், சோழன், நேரியன், பாண்டியன், வேம்பன், மீனவன் ஆகிய குலப்பெயர்கள் தமிழக மூவேந்தரோடு தொடர்பு உடையவை. பதுமன், பண்ணன், மலையர், காரி என்ற குலப் பெயர்கள் சங்க காலக் குறுநில மன்னர்கட்குரிய பெயர்களாகும். தொடர்பு எதுவும் இல்லாமல் குலப் பெயர்கள் அமையாது.

இடைக்காலச் சேரர்கள்

நாமக்கல்லில் கிடைக்கும் வீரசோழனின் செப்பேடுகள் கி.பி 3 ஆம் நிற்றண்டிளிருது ஆட்சி செய்த சேரர்கள் பற்றிய செய்திகள் தருகின்றன .இந்த மரபினர் சங்ககால சேரர்களின் குட்டுவன் கோதை ஆகியோர் வழிவந்தவர்களாக இக் கூறிக் கொள்கின்றனர். நாமக்கல் செப்பேட்டில் அரசு இக் கொடிவழி கூறப் பெற்றுள்ளது அச்செப்பேடுகளின் படி மரிசீ,காஸ்யபன் , ரவி (சூரியன் ) மனு ,இக் சுவாகு , சுரகண் , பாகிரதன் ,ரகு ,தசரதன் , ராமன் , மகாபாகு, கேரளா ஜகத்வதி மணி குட் டுவன் ,கோதை , ரவி (கொண்டாவை மண ந்த ரவி ),கண்டன் ஆகியோர் கூறப் பெறுகின்றனர் .இடை லிருந்து நான்காம் ஏடு கிடைக்கவில்லை , அதனால் கண் டனுக்கு ப் பின் ஆண்ட மன்னர்களை ப பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை .. கோகண்டன் வீர நாராயணன் ,கண்டன் இரவி ,இரவி கண்டன் ,இரவி கோதை , கோதை இரவி ..


"பழனி வட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் கப்பலூசுப் பட்டி என்ற ஊரில் கோக்கண்டன் மாந்திரன்"
"வடபரிசார நாட்டு இடிகரை யில் 
வெள்ளாளன் கொற்றந்தைகளில் 
பிள்ளையாண்டி கோக்கண்டனேன்"
out of 3 10 th century seppadu of cheras,now all with tamil nadu govt, 2 seppadu from one family of kongu vellala gounder(cheran kootam) around nammakal area , அனுமன்பள்ளிக் காணிச் செப்பேடு also with KVG through nagaswamy it went to govt archaeology department , ...

வஞ்சிவேள்

ஆதித்தசோழனின் காலத்திலேயே கொங்கு நாட்டைச் சேரர் குலச் சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். இச்சிற்றரச வம்சத்தவரை, ஆதித்த சோழனுடன் படைநடத்திச் சென்ற பூதி விக்ரம கேசரி வெற்றி கொண்டான் எனத் தோன்றுகிறது. மேற்குறித்த கொடும்பாளூர் மூவர் கோயிற் கல்வெட்டில் ‘‘வஞ்சிவேள்” என்பவனை வென்றதாக விக்ரம கேசரி பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறான்.வஞ்சிவேள் என்பது மேற்குறித்த சேரர் குலச் சிற்றரசர்களையே எனக் கொள்ளலாம்.


Only Kongu Vellala Gounder have vanji vel title

Kalvettu
கி.பி., 948ல் "தென்னவன் பேரரையனான வஞ்சிவேள் தாழி'(அந்துவகுலம்)) என்பவன் ஒரு ஏரியை கொல்லம்பாளையம் பகுதியில் அமைத்துத் "தாழி ஏரி' என்று பெயரிட்டான். 10 th and 11th century kalvettu:


"வெங்கால நாட்டுப் பழநாகம்பள்ளி வெள்ளாரில் அந்துவரில் பெருக்கன் வஞ்சி வேளான்""(karur area)
"கீரனூரிலிருகும் வெள்ளாரில் அந்துவரில் இளைய செல்ல நாயனான வஞ்சி வேளான் "" (dharapuram,mulanoor area)

சேரலன் = அதிகமான்

கரபுர நாதர் புராணப் பாடலில் அதிகமான் "சேரலன்" என்று குறிக்கப்பெறுகிறான். பெருஞ்சேரல் இரும்பொறையின் தகடூர்ப் போர் பற்றிய இலக்கியம் "தகடூர் யாத்திரை" . அந்நூலில் பெருசேரலிடம் அதியமானைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "உம்பி" என்று புலவர் கூறுகிரார். உம்பி என்றால் உன் தம்பி என்ற பொருல் சித்தூர் மாவட்டம் இலட்டிகம் அதியமான் மரபினனான விடுகாதழகிய பெருமள் கல்வெட்டில் சேரர் சின்னமாகிய வில்லும், பனைமரமும் பொறிக்கப்பட்டுள்ளன. பாடலில் "சேரன் அதிகன்" என்ற தொடர் வருகிறது வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் "வஞ்சியர் குலபதி" எழினி என்றும் ,"சேர வம்சத்து அதிகமான் எழினி" என்றும் உள்ளது , எனவே அதிகன் மரபின் முன்னோர் சேரர் என்பது தெளிவு.


 cheran-cheralan .. Anthuvan-Athi kootams are related kootams anthuvan and athi kulam .. said as irataikulam (like twins) .. Anthuvan irukum idathil athi irrupan ... Both always in same place ...

அதியமான் என்பது சேரமான், மலையமான் போன்று வயதது என்றும் இவர்கள் சேரர் 
வழி வயதவர்கள் என்றும் கருதப்படுகின்றது. இதை சேரர் + மகன் = சேரமான், மலையர்  + 
மகன்=மலையமான் என்பது போல், அதியர் + மகன் = அதியமான்

(சிறுபாணாற்றுப்படை) பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற் காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து வீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித் தீதிலாக்கனி யொன்றினை யுதவவே* சேரலன் மகிழ்வெய்தி. இந்த வண்கனி யெங்கிருந் தெடுத்தனி ரிதினதி சயமென்னோ சிந்தை யுற்றுண ரச்சொலு மென்றலுந் திருவுளங்களி கூர்ந்தே அந்த நாட் பிரமன்றரு மலையிதி லதிசய சஞ்சீவி எந்த நாட்களு முளதிதை யுட்கொள நரைதிரை யிவைமாற்றும் (கரபுர நாதர் புராணம்) இந்நாட்டில் கரும்புப் பயிர் கொண்டு வந்து நட்டார்கள் என்பது:-(Athiyaman) அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும் அரும்பெரு மரபிற் கரும்பிவட்டந்து (சிறுபாணாற்றுப்படை)

சாதலை நீக்கு மருநெல்லி தன்னைத் தமிழ்சொ லௌவைக்
காதர வோடு கொடுத்தவன் கன்னலை யங்குநின்று
மேதினி மீதிற் கொடுவந்து நட்டவன் மேன்மரபோர்
மாதிரஞ் சூழரண் மேவுவ துங்கொங்கு மண்டலமே.
    (க-ரை) நெடுநாள் வாழும்படி செய்யும் அருநெல்லிக் கனியை 
ஒளவையாருக்குக் கொடுத்தவனும், இவ்வுலகில் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து நட்டு உற்பத்தி செய்தவன் வழி வந்தவனும், கொல்லிக் கூற்றமாகிய மலையரணை யுடையவனுமாகிய அதிகமானுங் கொங்கு மண்டலம் என்பதாம். http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=46 http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=47
Vanchirayar --- Title is now with "மயிலர் கூட்டம்"(kongu vellala Gounders) they are in all three vanji too (karur,mulanor,dharapuram

சேரமான் பெருமாள்

கொங்கு நாட்டின் அத்தினை செப்பேடுகளிலும் சேரமான் பெருமாளை பற்றி மிக அதிகபடியான , கல்வெட்டிலும் குறிக்க பெறுகிறார் . Example:
சேரமான் தோழனான தொண்டைமான் (பில்ல குலம்)
சேரமான் பெருமாள் பிறவியான் (ஆந்தை குலம்)

சேரமான் பெருமாளும் கொங்கு நாடும்

சேரமான் கயிலை சென்றது

வாலசுந்தர கவிராயர் கொங்கு மண்டல சதகம்
கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே (கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர் சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி
ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான் பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது. பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே . கொங்கு நாடு தான் சேர நாடு
'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில், ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி ஆதியந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன்நாடதனில் ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே. (திருப்புகழ் - பழநி) என்பது இத்தகையதே.
அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய் கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப் பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.
675 அங்கை-ஆழி அரங்கன் அடியிணை 

     தங்கு சிந்தைத் தனிப் பெரும் பித்தனாய்க் 

     கொங்கர்கோன் குலசேகரன் சொன்ன சொல் 

     இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே
குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் நாலாயிர திவ்ய பிரபந்தம்.


  குலசேகரர்
வள்ளவாய் நெகிழத் துளிக்கும் பசுந்தேறல்
       மலர்மங்கை திகழ் வஞ்சியும்
      வளமை தரு குடநாடும் வான் பொருநையும்
        கொல்லிவரையும் உரிமைச் சேரர்கோன்
புள்ளவா வுறு நீல மாலிகை கிடந்த
       புயபூதரன் சூலசே கரன்
      பொருசிலையை நெடிய வடவரை மிசை
       பொறித்த வண் புகழ் வேந்த னினிது காக்க,
அள்ளல் வாய்ப் பழனத் தடந்தொறுஞ்
       சுரிசங்கம் அகடுளைந் தின்ற முத்தும்
      அம்பொற் பசும்பாளை தயைவிழ்க் கும்
       கமுகின் அணிமுத்தும் நிலவுங் காலக்
கள்ளரு நறுமலர்க் குமுதம் விரி பேரை
       வரு கருணா கரக்குரி சிலைக்
      கடவுளைக் குலநாத னைப் புகழ்ந் தேத்துமென்
       கவிதையின் சொல்தழை யவே.

சேரனுக்கு முடிசூட்டுதல்
நற்குடி நாற்பத்தெண் ணாயிரங் கோத்திர நாட்டவர்கள்
பொற்கிரீ டந்தனைச் சாற்றவந் தார்புவிக் காவலனாம்
அக்கினி கோத்திரன் புகழ்சேர மான்பெரு மான்றனுக்கு
வைக்கவும் வந்திடும் வேளாளர் வாழ்கொங்கு மண்டலமே.
அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,
அந்துவ‌ன்
அன‌ங‌ன் ....

அனுப்பப்பட்டிச் செப்பேடு.இதில் சேரமான் பெருமாள் மற்றும் 24 பட்டக்காரர் ஆனைவருமே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். 10 கி.பி பட்டையம் அரசிடம் தற்பொழுது உள்ளது.கடைசி சேரலான உலாச்சேரல் (சேரமான் பெருமாள் நாயனார்) கைலை செல்லும் முன் தன் கீழ் பெரிய பட்டமான பூந்துறை நன்னாவுடையார் வம்சத்தினரான வேலப்ப நயினான் என்பவரை கொங்க தேசத்திற்கும் அதன் கீழிருந்த கர்னாட தேசம், மலையாள தேசம், கேரள தேசம் ஆகிய தேசங்களுக்கும் தான் வரும்வரை அதிகாரியாக திருவாஞ்சைக்களத்தில் நியமித்துச் சென்றதாக வரலாறு.இன்றும் சேரமானது வாரிசுகள் தாராபுரத்தில் உள்ள வஞ்சியம்மன் கோயில் பூஜை முறைகளைச் செய்து வருகின்றனர்.

பூந்துறை – நன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :

நண்ணாவுடையார் உலகுடையார்

தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் 
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் 
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் 
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.


 பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளதுஅவல் பூந்துறை – முதல் பூந்துறைதுய்யம் பூந்துறை – இரண்டாம் பூந்துறைஇவ்வூரே கொங்கதேசத்தின் முதல்ஊராக வழங்கி வருகிறதுஇவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்ஆதிகாணியாகும்அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமேபூந்துறை பட்டக்காரரது ஊராகும்இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர்மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர்பசுபதீசருக்கு கலசம் வைப்பதும்அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும்இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரே.ஆதியானதும்பெரியதும்வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால்அளிக்கப்பட்டதுகொங்கு மண்டல சதகப் பாடல்களிலும்ஆவணங்களிலும்பட்டயங்களிலும்கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம்.தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும்அபயம் அளித்தவருமான வம்சத்தவர்அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும்பிடுங்கிக்கொண்டனர்அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.

தற்போதைய பட்டக்காரர் வாரிசுகொங்க 24 நாட்டு பெரியவீட்டுக்காரர்வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டார்பூந்துறை நாட்டு பெரிய வீட்டுக்காரர்பூந்துறைபெரியவீட்டார்அவல் பூந்துறை பெரியவீட்டார்காரூத்துப்பாளையம் பரம்பரை மணியகாரர் ஸ்ரீமான் குருசேவ் (எ) ஸ்ரீமான் வாரணவாசி நன்னாவுடையார்அவர்கள்.

"Keralolpathi"

Braahmanans Choose Governors There is no clear picture of the political history and administration in the Chera kingdom of Kongu during this period when they were subordinate to the Chaalookyaas. The earlier Sangham works and inscriptions would suggest that at least during the close of the Sangham age, some members of the Chera royal family lived in the capital, Karur (Salem district of Tamil Nadu) while others ruled in Tondi and Muziris. This same system would have continued in the post-Sangham period from the 4th century onwards, and when Chaalookyaas and Pallavaas, and later the Paandyaas, became the overlords, they must have exercised their right to send governors to this part of Kerala. Perhaps this is what the traditional Braahmanan chronicle of "Keralolpathi" describes as the system of Braahmanan assembling at Tirukkaariyur (Karur) and bringing Perumaals from the other lands (or "Paradesam"). When the organised Braahmanan settlers of the new 32 colonies became prosperous and powerful, they naturally must have had an important role in the administration and also in the choice of the governor stationed at Muchiri (Muziri of Greeks and Romans and Muyirikod of the Jewish copper plates).
Foundation of New Chera Kingdom The governors from outside must have been appointed by the Cheraas of Karur in Kongu or by their overlords in the Chaalookyaas, Pallavaas and Paandyaas at later times. However, the exact point of time when the Cheraas or other governors were discontinued following the foundation of a new Chera kingdom at Makotai cannot be ascertained with the help of the sources available at present. It is possible that a political revolution supported by the new powerful Aaryan Braahmanan oligarchy enabled some governor belonging to the Chera dynasty to become the founder of a new kingdom with its capital at Makotai near the site of the ancient Muziris of the Sangham age. As pointed out earlier, the Braahmanans of the Aaryan settlements had become established and prosperous by the 8th century. They could well have had a share in promoting the foundation of this kingdom at sometime in the beginning of the 9th century. Their traditional chronicle, "Keralolpathi" gives an account of such a development which may be summarised here.
Finding anarchy and mutual conflicts intolerable, the representatives of the 64 Braahmanan settlements (32 of Tulu and 32 of Kerala) elected the representatives of four settlements as leaders and they brought Perumaals from outside Kerala. These Perumaals were to rule for periods of 12 years according to certain rules and regulations. After a long time of rule by Perumaals, they brought the Cheramaan Perumaal, a Kshathriyan once. He was not sent back after the term of 12 years. His sister, a Kshathriya princess, was married to a Braahmanan so that the offspring could be good Kshathriyas of the solar race. When this Perumaal ruled for 36 years, and did not return after that, the overlord, called Krishna Raayar, invaded Kerala. The subjects were divided in their loyalties, but they finally decided to forgo the pattern of government laid down for them by Parasurama and allow Cheramaan Perumaal to rule over Kerala. In spite of some discrepancies in detail, this account is convincing in its outlines. In the absence of clear-cut epigraphic or literary evidence regarding the foundation of this Chera kingdom, this Braahminical tradition may be provisionally accepted. It has the advantage that it suits the known background of Kerala's early connection with Kongu in the Sangham age, the subsequent conquest of the old Chera capital in Kongu by the Chalookyaas, Pallavaas and Paandyaas, and the emergence of the new Chera kingdom of Makotai.
It appears that a Rāja or Perumāl, as he was called, from the adjoining Chēra kingdom, including the present districts of Salem and Coimbatore, was, as an improved arrangement, invited to rule for a duodecennial period, and was afterwards confirmed, whether by the lapse of time or by a formal act of the Brāhman owners it is not known. The Chēra Viceroys, by virtue of their isolation from their own fatherland, had then to arrange for marital alliances being made, as best they could, with the highest indigenous caste
When they found it necessary to have a separate king, one Attakat Nambūtiri was deputed, with a few other Brāhmans, to go and obtain a ruler from the adjoining Chēra territory. The only pass in those days, connecting Malabar and Coimbatore, was that which is now known as Nerumangalam. When the Nambūtiris were returning through [230]this pass with the ruler whom they had secured from the Chēra King, a strange light was observed on the adjacent hills.

Cochin - Karur - An Ancient Trade route along the river bank, which is the route for carrying Cheraman perumals from Karur

cheraman perumal was taken from karur... from karur he was taken along the amarvathi river bank upto kolumam and then in to kerala via Nerumangalam forests.














"நம்பொத்திரிகள் கரூர் வந்து சேரர் மரபினர் இடம் எங்கள் நாட்டை ஆள உங்கள் குடி சிறுவர் களை அனுப்புங்கள், தங்கள் குடியை செர்ந்த சிறுவர்கள் பூந்துறைக்கு கல்வி கற்க சென்று ஊள்ளனர்"

Until Robert Sewells times, konga= chera=ganga https://archive.org/stream/asketchdynastie00sewegoog

Govt Proof

So only tamil nadu Govt agency submitted to UNESCO & central Govt & International Community.chera,chola,velirs are vellalars, pandyans where later amalgamated to pure vellala.ventar-velir-vellalar of same stock by many scholars & Arceologist. with tamil nadu govt symbol.

IN 1970 International Institute of Tamil Studies; report submitted to the UNESCO, by A. Subbiah, Member-Secretary, Managing Committee on his visiting mission to fourteen countries with an UNESCO grant.http://www.worldcat.org/title/international-institute-of-tamil-studies-report-submitted-to-the-unesco/oclc/00393636

http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=velalar&redir_esc=y#search_anchor and "also note that tamil nadu govt symbol" "The Vēļāļar of the Tamil country (the descendants of the Vēļir) have retained the honorific till this day in their names (c.f gavundan and 'gouņder'

"http://books.google.co.in/books?lr&hl=fr&id=rWRkAAAAMAAJ&dq=velir+velalar&q=pandyas#search_anchor here they says kings are all velir , (i.e kongu vellala gounder )

கொங்கு நாட்டு வெள்ளாளன் பிட்டன் கொற்றhன்்
கொங்கு வேளாளன் ஆகிய பிட்டன் கொற்றன் நம்பியூரி ல்(near to gobi,erode) பிறந் தான். அவன்
தந்தை நல்லாவியூரி ல் வாழ்நதான்.
;
மாந்தரஞ்சேரல் இரும்பொறையிடமும்,
பெருஞ்சேரல், இளஞ்சேரல் இரும்பொறையிடமும் படைத்தலைவனாக இருந்தான்.
இவனது அக்காள், கொற்றி , இவனது மகள் கிரனேறி இருவரும் கல்படுக் கை
அமைத்துக் கொடுத்தார்கள். கொங்குக் கரூர் ஆர் நாட்டான் மலையில் இவர்களைப்
பற்றிய கல்வெட்டு உள்ளது. கிள்ளியிடம் கரூப் போhpல் பிட்டன் தோற்றhன். (புறம்-
59) மாந்தரஞ்சேரல் பிறகு கரூரைப் பிட்டனிடம் ஒப்படைத்தான்.
பெருஞ்சேரல்
இரும்பொறையின் படைத்தலைவனாக இருந்தான்.
வேட்டம்பாடியில் மாடி வீடு
அமைத்துப் படைகளை நிரந்தரமாக வைத்திருந்தான். முசிறி கழுவுள், கொல்லிமலை,
ஓரி , அதியமான் மூவரையும் வென்றhன்.

5 comments:

  1. அருமையான தொகுப்பு.. உங்கள் பணி மிகவும் போற்றத்தக்கது..

    ReplyDelete
  2. Its a good quality article. But, very little about the author. Could I ask the author to share his/her details , history behind this article etc?

    ReplyDelete
  3. // அந்துவன் குலத்துப் பொறையன் பெருந்தேவிக்குப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வழியாதான் ( பதிற் IV )(chera kootam x anthuvan kootam)//
    எல்லா இடத்திலும் சேர அரசன் பெயரும் அவரை மணந்த வேளிர் குலப்பெண்களின் பெயரையும் கூறியுள்ளீர்கள். இங்கு மட்டும் ஏன் அரசன் பெயரை விட்டீர்கள். அரசன் பெயர் அந்துவஞ்சேரல் இரும்பொறை. அவன் அந்துவன் கூட்ட முன்னோன் அல்லவா. தாங்கள் குறிப்பிட்ட சேர அரசரை மணந்த பெண்களின் கூட்டங்கள் அப்பெண்களின் பெயர் கொண்டிருக்க இங்கே அந்துவன் கூட்டம் அந்துவன் என்னும் அரசன் பெயர் கொண்டிருப்பதை கவனிக்கவும். அந்துவன் வஞ்சிவேள் ஆவான். வஞ்சியைத் தலைநகராய்க் கொண்டு அரசாண்ட சேரப் பேரரையன் அல்லவா....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கூரிய அறிவுக்கு என் பாராட்டுக்கள்

      Delete
  4. சேர வெள்ளாளர் என்கிற சேர குல உபாத்தியார்கள் என்பவர்களுக்கு
    உள்ள தொடர்பை குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்

    ReplyDelete